கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அதிவேகமாக சென்ற கார்கள் முந்தி செல்ல முயன்றதில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. பாதூர் கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து திருச்சி சென்று கொண்டிருந்த கார் முன்னாள் சென்ற மற்றொரு காரை முந்தி செல்ல முயன்றது. அப்போது ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு சாலையின் தடுப்பிலும் மோதி விபத்துக்குள்ளான நிலையில் கார்களில் பயணித்த இருவர் காயமடைந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.