கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே அதிவேகமாக சென்ற கனரக வாகனம், சாலையோர மின் கம்பம் மீது மோதி சுக்கு நூறாக உடைத்துவிட்டு, வேகமாக சென்றதன் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள், சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு துரத்தி சென்று லாரியை மடக்கி பிடித்து, அதன் ஓட்டுநரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.