காஞ்சிபுரத்தில் அரசு நியாய விலை கடையில் காலாவதி பொருட்கள் விற்பனை குறித்து கேள்வி எழுப்பிய வாடிக்கையாளருக்கு கடை ஊழியர் அலட்சியமாக பதிலளித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் நகரில் உள்ள நியாய விலை கடையில் வெள்ளை கொண்டைக்கடலை வாங்கி சென்ற வாடிக்கையாளர், கடலை காலாவதியானதை கண்டு ஊழியரிடம் வந்து விளக்கம் கேட்டார். அதற்கு பதிலளிக்க மறுத்த கடை ஊழியர், காலாவதியானதை பெற்று கொண்டு வேறு பாக்கெட்டை வழங்கினார். அதுவும் காலாவதி நாளின் கடைசி தேதியாக இருப்பது குறித்து கேள்வி கேட்ட வாடிக்கையாளரிடம், வேண்டுமென்றால் பணத்தை வாங்கி செல் என அலட்சியமாக பதிலளித்துள்ளார்.