திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழி கிராமத்தில் சாலையை ஒட்டிய விவசாய நிலத்தில் காலாவதியான மருந்து பாட்டில்கள் மற்றும் மாத்திரைகள் கொட்டப்பட்டதால் நெற்பயிர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர். மழை காரணமாக விவசாய நிலத்தில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், பாட்டில்களில் இருந்து மருந்து வெளியேறி மிதக்கிறது. சுமார் மூன்று டன் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதையும் படியுங்கள் : 2 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின