செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வாரச்சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான பொருட்களை மூட்டை மூட்டையாக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பல்லாவரம் வாரச்சந்தை வெள்ளிக்கிழமை தோறும் நடைபெற்று வரும் நிலையில், காலாவதியான பொருட்கள் மற்றும் சுகாதாரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.