நெல்லையில் கர்ப்பிணிகளுக்கு காலாவதியான பொருட்கள் வழங்கிய விவகாரத்தில் மருத்துவ பணியாளர்கள் மூன்று பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் பர்கிட் மாநகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்பிணிகளுக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து பெட்டகத்தில் காலாவதியான நெய், பேரிட்சம்பழம் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாக அதன் புகைப்படம் சமூக வளைதளங்களில் பரவியது. இது தொடர்பாக மருத்துவ பணியாளர்களிடம் நடத்திய விசாரணையில், மூடி சீல் வைக்கப்பட்ட பெட்டகங்கள் மட்டுமே எங்களுக்கு வரும் என்றும் இந்த பெட்டகங்களில் கவனக்குறைவோடு காலாவதியான பொருட்களை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.