தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்ததாக 6 கடைகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் காலாவதியான உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள், கெட்டுப்போன மீன்கள் உள்ளிட்டவை விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில், 6-க்கும் மேற்பட்ட கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, அக்கடைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை என அதிகாரிகள் அபராதம் விதித்ததில் மொத்தம் 15 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.