பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் வருவதால் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு நன்மையாக இருக்கும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த் அவர் தஞ்சாவூரில் விமானப்படை நிலையத்தினை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.