தமிழ்நாட்டில் ஊடுருவிய போதைப்பொருள் விற்பனை கும்பல். கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் தான் டார்க்கெட். மும்பை, பெங்களூரு, மேற்குவங்கம், மிசோரம் மாநிலம் வரை நெட்வொர்க்கை உருவாக்கி மெத்தபெட்டமைன் விற்பனை. நைஜீரியா, காங்கோ, செனகெல் நாட்டைச் சேர்ந்த மூன்று பேரை தட்டித் தூக்கிய போலீஸ். போதைப்பொருள் வழக்கில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் சிக்கியது எப்படி? நடந்தது என்ன?மது, சிகரெட், புகையிலை, கஞ்சாவுக்கு மாற்றா, இப்ப உள்ள இளைஞர்கள் சிலர் மெத்தபெட்டமைன், கொக்கைன்னு விலை உயர்ந்த போதைப்பொருட்களுக்கு அடிமையாகிட்டு இருக்காங்க. பவுடர் மாதிரி இருக்குற இந்த போதைப் பொருட்கள வெளிநாடுகள்ல இருந்து சென்னைக்கு கடத்தி கொண்டு வர்ற கும்பல், கல்லூரி மாணவர்கள், படித்த இளைஞர்கள், இளம்பெண்கள டார்க்கெட் பண்ணி விற்பனை செஞ்சுட்டு இருக்காங்க. இத தடுக்க தமிழக அரசு பல நடவடிக்கை எடுத்தாலும் சமூக விரோதிகள், ஏதாவது ஒரு ரூபத்துல ஊடுருவி இந்த மாதிரியான போதைப்பொருட்கள விற்பனை பண்ணிட்டு தான் இருக்காங்க. போதைப்பொருள தடுக்குற நடவடிக்கையிலும், அதுக்கு அடிமையான இளைஞர்கள மீட்கவும் தமிழக அரசு பல முயற்சிகள எடுத்துட்டு இருக்காங்க.இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட எஸ்பிக்கு ஒரு ரகசிய தகவல் கிடைச்சுருக்கு. அதுல மணவாளநகர் பகுதியில முன்னீர், ஜாவேத்ன்னு 2 பேரு மெத்தப்பெட்டமைன்ன பதுக்கி வச்சுருக்கறதா புகார் வந்துருக்கு.உடனே, சம்பவ இடத்துக்கு போன போலீஸ், அவங்க ரெண்டு பேரையும் தங்களோட கஸ்டடியில எடுத்து விசாரிச்சுருக்காங்க.அடுத்து, அந்த ரெண்டு பேரோட பேங்க் ஸ்டேட்மெண்ட்ட ஆய்வு செஞ்சதுல பெங்களூரு, மும்பைய சேர்ந்த சிலருக்கு அதிக டிரான்ஸாக்சன் ஆனது தெரிய வந்துருக்கு. அதுமட்டும் இல்லாம இவங்க ரெண்டு பேரும் அடிக்கடி மும்பையில இருந்து போதைப்பொருட்கள வாங்கிட்டு வந்து, இங்க விற்பனை பண்றதும், வெளிநாட்டவர்கள் மூலமா, இந்த போதைப்பொருள் அவங்களுக்கு கிடைக்கிறதையும் போலீஸ் கண்டுபிடிச்சுருக்காங்க.அதுக்கடுத்து, இன்ஸ்டால அதிகமா பாலோயர் வச்சுருக்குறவங்க, இன்ஸ்டால பிரபலமா இருக்குற சில நபர்களையும் தொடர்பு கொள்ளுற இந்த ரெண்டு பேரும், அவங்க மூலமா அந்த பாலோயர்ஸ் கிட்ட பேசி, மெத்தபெட்டமைனையும், கொக்கைன் போன்ற போதைப் பொருட்களையும் விற்பனை பண்ணிட்டு இருந்துருக்குறதும் விசாரணையில தெரிய வந்துருக்கு.இதுல சிக்குனவரு தான் இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் சிபிராஜ். உடனே சிபிராஜோட வீட்டுக்கு போன போலீஸ், அவரு கிட்ட இருந்து 54 கிராம் மெத்தபெட்டமைன கைப்பற்றி அவரயும் விசாரணை வளையத்துக்குள்ள கொண்டு வந்துருக்காங்க.இந்த சம்பவத்த பாத்து, அதிர்ச்சியடைஞ்ச போலீஸ் இந்த போதைப்பொருட்கள் எல்லாம் வெளி மாநிலங்கள்ல இருந்து தமிழ்நாட்டுக்குள்ள எப்படி வருது, யார் மூலமா வருது, இந்த நெட்வொர்க்கிற்கு பின்னாடி இருக்குற தலைவன் யாரு, அவங்க எந்த நாட்டைச் சேந்தவங்கன்னு மொத்ததையும் விசாரிக்க ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்ட போலீசார் 15 பேர் கொண்ட குழுவ அமைச்சு விசாரிக்க ஆரம்பிச்சுருக்காங்க.அப்ப போதைப்பொருள் கும்பலோட தலைவன் டெல்லியில இருக்குறது தெரிய வந்துருக்கு. அங்கிருந்த தமிழ்நாடு, மேற்குவங்கம், நாகாலாந்து, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பணம் டிரான்ஸாக்சன் அதிகமா நடக்குறத கண்டுபிடிச்ச போலீசார், நாமக்கல் வந்த நைஜிரியாவ சேந்த மைக்மேல் நம்நடி, சென்னையில காங்கோ நாட்டைச் சேர்ந்த கபிதா யானிக் திஷிம்போன்னு போதைப்பொருள் கும்பலைச் சேந்த ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணிருக்காங்க.அடுத்து, அவங்க கொடுத்த தகவல வச்சு டெல்லிக்கு போன அந்த குழு, நொய்டா உள்ளிட்ட இடங்கள்ல தீவிரமா சோதனை பண்ணிருக்காங்க. அப்ப அங்க பதுங்கியிருந்த செனகல் நாட்டைச் சேந்த பெண்டேவ கையும், களவுமா பிடிச்ச போலீஸ், அவர தங்களோட கஸ்டடியில எடுத்து புலன் விசாரணை பண்ணிருக்காங்க.அடுத்து, அவனோட வாட்ஸ்அப்ப ஆய்வு செஞ்சதுல வடகிழக்கு மாநிலங்கள சேர்ந்த ஒரு மிகப்பெரிய கும்பலும் இந்த போதைப்பொருள் விற்பனையில ஈடுபட்டது தெரியவந்துருக்கு.போலி சிம் கார்டு, போலி அடையாள அட்டைய காட்டி பல இடங்கள்ல குடியேறுற இந்த கும்பல், பெரிய பெரிய டெக்ஸ்டைல் நிறுவன உரிமையாளர்கள், தொழில் நிறுவனங்கள சேந்தவங்கள கைக்குள்ள போட்டுக்கிட்டு, அவங்களோட பேங்க் அக்கவுண்ட்டுக்கு பணத்த பரிமாற்றம் பண்ணி, அவங்க மூலமாவே லோக்கல்ல உள்ள நபர்களுக்கு பணத்த டிஸ்டிரிபியூட் பண்ணிட்டு, இந்த தொழில கச்சிதமா பண்ணிட்டு இருந்துருக்காங்க.ஒவ்வொருத்தரையா தட்டித் தூக்கி விசாரிச்சு, இந்த ஒரு கும்பல சேந்தவங்கள சுத்தி வளைச்சு பிடிச்சாலும், இதுமாதிரி பல வெளிநாட்டைச் சேந்தவங்கள இந்தியாவுக்குள்ளையும் குறிப்பா தமிழ்நாட்டுக்குள்ள ஊடுறுவி போதைப்பொருட்கள விற்பனை பண்ணி சம்பாதிச்சுட்டு இருக்காங்க. அத்தோட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை போதைப் பொருள் கட்டிப் போட்டிருப்பதாகவும், இதுல இருந்து அவர்களை விடுவிக்க தேவையான கூடுதல் நடவடிக்கைகளையும் போலீசார் ஈடுபடனும்னு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துருக்காங்க... இதையும் பாருங்கள் - Nigazh Thagavu | "உங்க அழகுக்கு HE IS NOT WORTH" - ஒரே ஒரு ரீல்ஸால் கணவன் கதையே CLOSE