புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்ற இளைஞர்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அராஜகத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மறைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் நினைவேந்தல் நிகழ்ச்சி வடகாட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக ஏராளமான இளைஞர்கள் பைக் மற்றும் வேனில் சென்று புதுக்கோட்டை நகரில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அட்ராசிட்டியில் ஈடுபட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.