அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்க அளிக்க வேண்டும் என விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் வலியுறுத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சைலோம் பகுதியில் உள்ள டேனிஷ் மிஷன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆற்காடு லூத்தரன் திருச்சபை ஆசிரியர்கள் திருவிழா மற்றும் பணி நிறைவு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ, அரசு பள்ளிகளுக்கு இணையான சலுகைகள், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதையும் படியுங்கள் :மருமகளின் நடத்தை குறித்து தவறாக பேசிய மாமனார் மாமனார் உட்பட 3 பேரை கத்தியால் குத்திய உறவினர்கள்...!