திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ள சரஸ்வதி அம்மன் கோயிலில் சரஸ்வதி பூஜை சிறப்பாக நடைபெற்றது. தென்னந்தியாவிலேயே சரஸ்வதி அம்மனுக்கு தனி ஆலயம் கூத்தனூரில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவராத்திரி திருவிழா கடந்த 3ஆம் தேதி தொடங்கிய நிலையில் சரஸ்வதி அம்மனுக்கு பட்டாடை உடுத்தப்பட்டு பாத தரிசன விழா நடைபெற்றது.