ராமநாதபுரம் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் திடீரென சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கணக்கில் வராத 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். ஒப்பந்ததாரர்களிடம் இருந்து அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்ற நிலையில், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.