ராணுவ முன்னாள் கேப்டன் ஒருவர் வீட்டில் இருந்து வெளியேறி 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குடும்பத்தினருடன் சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 17-ம் தேதி விஜயநாராயணம் கடற்படை தளம் அருகே சாலையில் சுற்றித் திரிந்த முதியவரை போலீஸார் அழைத்து விசாரித்தபோது, அவர் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ கேப்டன் கந்தர்வ்சிங் என்பது தெரியவந்தது. சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவரை, நாங்குநேரியில் உள்ள அரசன் முதியோர் மற்றும் பெண்கள் காப்பகத்தில் தங்க வைத்த போலீஸார், அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தமிழகத்துக்கு வந்த அவரது மகன்கள் அனில் சிங் மற்றும் சுனில் சிங் தந்தை கந்தர்வ்சிங்கை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் விட்ட காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.