மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல், சென்னை ராமாவரம் மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது. உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீரென உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.