நீலகிரி மாவட்டம், பர்லியார் மலைப்பகுதியில் செல்ஃபோன் நெட்வொர்க் கிடைக்காமல் மலைவாழ் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.அவசரத்திற்கு ஆம்புலன்ஸை கூட அழைக்க முடியவில்லை என கூறும் மக்கள், ஜி பே, போன் பே உள்ளிட்ட சேவைகள் முடங்கியதால் தங்களது வாழ்வாதாரமே முடங்கியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.