வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்குக் கூட சீட் இல்லாமல் போகலாம் என அமைச்சர் பொன்முடி கூறியதால் பாக முகவர்கள் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருக்கோவிலூர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் வகையில் பணியாற்ற வேண்டும் என்றார்.