நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள எருமாடு சிவன் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர கண்டனம் தெரிவித்து, கோவில் மீட்பு குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழங்குடியின அமைப்புகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்ற இந்த போராட்டத்தில் அறநிலையத்துறைக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.