இடைத்தேர்தல்களை சந்தித்து ஸ்டார் தொகுதியான ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்த முறை யார் போட்டியிடப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில், கூட்டணிக் கட்சிக்கு தொகுதியை ஒதுக்கினால் தோற்கடிக்கப்படுவார் என அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு அதிர்ச்சிகர தகவலை சொல்லியிருக்கிறார்.இருமுறை இடைத்தேர்தலை எதிர்கொண்ட ஒரே தொகுதிஒரு ஆட்சிகாலத்தில் இருமுறை இடைத்தேர்தலை எதிர்கொண்ட ஒரே தொகுதியென்றால் அது ஈரோடு கிழக்கு தொகுதி தான். தேர்தலுக்கு தேர்தல் தமிழ்நாட்டு அரசியல் களத்தையே உற்றுநோக்க வைத்து பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக்கொண்ட இந்த தொகுதி மீண்டும் லைம் லைட்டுக்கு வருமா? என்ற எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.வெற்றி பெறும் கட்சி தான் ஆட்சியை பிடிக்கும்தமிழ்நாட்டு அரசியலில் திருமங்கலம் ஃபார்முலா, ஆர்.கே.நகர் ஃபார்முலாவை தொடர்ந்து மற்றுமொரு ஃபார்முலாவை அறிமுகப்படுத்தியது ஈரோடு கிழக்குத் தொகுதி தான். வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்தது முதல் வெள்ளிப்பொருட்களை பரிசளித்தது வரை இடைத்தேர்தல் நடைபெற்ற விதம் தேசிய அளவில் விவாதப்பொருளானது. இந்நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் களம் காணப்போவது என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, இந்த தொகுதியில் வெற்றி பெறும் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என்ற செண்டிமெண்ட் இருப்பதாக சொல்லப்படுகிறது.திமுகவே இந்த முறைஆளும் திமுக கூட்டணியை பொறுத்தவரை திமுகவே இந்த முறை களம் காணும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் வென்ற சந்திரகுமார் மீண்டும் போட்டியிடுவார் என தெரிகிறது. ஒருவேளை காங்கிரஸ் இந்த தொகுதியை கேட்டுப் பெறும் பட்சத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் அல்லது திருமகன் ஈவெராவின் மகளுக்கோ வாய்ப்பு வழங்கப்படலாம் என கதர்சட்டை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.அதிமுக கூட்டணியில் யாருக்கு?அதிமுக கூட்டணியை பொருத்தவரை ஈரோடு கிழக்கு தொகுதியை தமாகாவை சேர்ந்த யுவராஜ் தலைமையிடம் கேட்டுப்பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 2021ஆம் ஆண்டு இதே தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியுற்றவர் தான் யுவராஜ். எனினும் இந்த முறை அதே தொகுதியை கேட்டுப்பெற்று வெற்றி பெறும் முனைப்பில் களப்பணியில் குதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேசமயத்தில், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவான தென்னரசுவும் தொகுதியை கேட்டு கோதாவில் குதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. Related Link திருச்செங்கோட்டுக்கு தவெக குறி நிச்சயம் கூட்டணிக்கு ஒதுக்கப்படாது இதுதொடர்பாக தென்னரசுவை எமது செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஈரோடு கிழக்கு தொகுதியை நிச்சயம் கூட்டணிக்கு ஒதுக்கப்படாது என அறுதியிட்டு கூறிய அவர், இங்கே வெற்றிபெறவில்லையென்றால் ஆட்சியே பிடிக்க முடியாது என்றார். இடைத்தேர்தலிலேயே நிறைய செலவு செய்த போதிலும், சொந்த கட்சியினரே திமுகவிடம் பணம் பெற்று தன்னை தோற்கடித்ததாக கூறி பகீர் கிளப்பினார்.அதிமுக வேட்பாளரை தான் நிறுத்துவார்கூட்டணி கட்சிக்கு தொகுதியை ஒதுக்கினால், அதிமுகவினர் வேலை செய்ய மாட்டார்கள் அப்படி செய்தாலும் ஜெயிக்க வைக்க மாட்டார்கள் என தடாலடியாக போட்டுடைத்தார். தேர்தலை மையப்படுத்தி அதிக பணத்தை செலவு செய்துள்ளதாகவும், இபிஎஸ் தெளிவாக முடிவெடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளரை தான் நிறுத்துவார் என்றும் தென்னரசு நம்பிக்கை தெரிவித்தார்.கூட்டணி கட்சி வேட்பாளர் தோற்கடிக்கப்படுவது உறுதிதென்னரசுவின் பேச்சை பார்க்கும் போது, ஈரோடு கிழக்கு தொகுதியை கூட்டணி கட்சிக்கு அதிமுக ஒதுக்கினால் மாவட்ட அளவில் கட்சியில் பூகம்பம் வெடிக்கும் அல்லது திட்டமிட்டு கூட்டணி கட்சி வேட்பாளர் தோற்கடிக்கப்படுவது உறுதி என்றே எடுத்துக் காட்டுகிறது. நியூஸ் தமிழ் செய்திகளுக்காக செய்தியாளர் சக்திவேல்... Related Link அதிருப்தியில் அண்ணாமலை