ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. திமுக, நாதக உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் களம் கண்ட தேர்தலின் வாக்குகள், சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. 14 மேசைகளில் 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு நண்பகலுக்குள் முடிவுகள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.