மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். புளிச்சக்காடு கிராமத்தில் நடைபெற்ற விழாவில், பெற்றோர்கள் சீர்வரிசை எடுத்து வர, சிலம்பாட்டம், வாள்வீச்சு, சுருள் வாள், அலங்கார சிலம்பம், ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.