சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார். "மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி சிவகங்கையில் இரண்டாவது நாளாக சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையில் கீழடி அருங்காட்சியத்தை பார்வையிட்ட அவர் கட்டட அமைப்புகள் குறித்து தொல்லியல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.