எடப்பாடி பழனிசாமியின் திருவிளையாடலால் அதிமுகவுக்கு மூடுவிழா நடத்தும் அபாயம் உள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் தெலுங்கன்குடிகாட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் விழித்துக் கொள்ளவில்லை என்றால், தேர்தலுக்கு பிறகு அக்கட்சியை மீட்டெடுக்கும் பொறுப்பு தங்களுக்கு உண்டு என்றார்.