வேலூரில் அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது, மக்கள் கூட்டத்திற்கு இடையே நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் வந்த நிலையில், அடுத்த முறை நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் கூட்டத்திற்கு நடுவே வந்தால், ஆம்புலன்ஸை ஓட்டி வருபவர் நோயாளியாக அதே ஆம்புலன்ஸில் செல்ல வேண்டியிருக்கும் என எச்சரித்தார்.தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தான் பங்கேற்கும் ஒவ்வொரு கூட்டத்திலும், இது போன்று ஆள் இல்லாத ஆம்புலன்சை அனுப்பி மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் கேடு கெட்ட, கேவலமான வேலையை திமுக அரசு தொடர்ச்சியாக செய்வதாக குற்றம்சாட்டினார்.