சென்னை, கண்ணகி நகரை சேர்ந்த கபடி வீராங்கனை கார்த்திகாவை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்து பாராட்டினார். பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியில் தங்கம் வென்று அசத்திய இந்திய மகளிர் கபடி அணிக்காக விளையாடிய கார்த்திகா, அணியின் வெற்றிக்காக சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டிய எடப்பாடி பழனிசாமி, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகா, கண்ணகி நகரை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக தெரிவித்தார்.பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, தங்கம் வென்று அசத்தியது. இதில், சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா, சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடி தந்தார். இந்த தொடரில், அவர் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்டார். அடுத்ததாக, சீனியர் போட்டி மற்றும் உலக சாம்பியன் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது என தெரிவித்த கார்த்திகா, தாம் வசிக்கும் கண்ணகி நகரில், உள்விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.இதையும் பாருங்கள்... தங்கமகள் கார்த்திகா பேட்டி | KarthikaKabaddi speechhttps://www.youtube.com/shorts/Uhy8BVPzOUU?t=2&feature=share