எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் குரலாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் டிஆர்பி ராஜா விமர்சித்தார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மின் கட்டணம் உயர்வுக்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசிடம் தமிழக உரிமையை அடகு வைத்ததுதான் காரணம் என சாடினார்.