5 பேர் மரணத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் பொறுப்பு என பகிரங்கமாக குற்றம் சாட்டிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நம்பி வந்த மக்களை துன்பத்தில் ஆழ்த்தியது வெட்கக் கேடான செயல் எனவும் காட்டமாக விமர்சித்தார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக அரசின் சரியான திட்டமிடல் இல்லாததால் தான் 5 பேர் மரணம் அடைந்ததாகவும், சாகசங்களை காண வருமாறு அழைத்துவிட்டு லட்சக்கணக்கான மக்களுக்கு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.