நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே இ-பைக் பேட்டரி வெடித்து படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனைகுடியில் உள்ள கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்த ஜான்சி பாப்பா என்ற பெண் கடந்த 14 ஆம் தேதி முட்டை அடைகாக்கும் இன்குபேட்டர் அறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சார்ஜ் போட வைக்கப்பட்டிருந்த இ-பைக் பேட்டரி திடீரென வெடித்து படுகாயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜான்சி பாப்பா 6 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.