கையில் கத்தியுடன் வந்து காவல் நிலையத்தில் சரணடைந்த முதியவர். நடுவீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண். கசாப்பு கடைக்கு பயன்படுத்தும் கத்தியால் பெண்ணை வெட்டி கொலை செய்த பயங்கரம். முதியவர் அந்த இளம்பெண்ணை கொலை செய்தது ஏன்? அந்த பெண்ணுக்கும் முதியவருக்கும் என்ன தொடர்பு? பின்னணி என்ன?கையில் கத்தியுடன் காவல்நிலையத்தில் சரணடைந்த முதியவர்சார், நான் ஒரு பொண்ண கொலை பண்ணிட்டேனு கையில கத்தியோட ஒரு முதியவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துருக்காரு. யாரை கொலை செஞ்சீங்க? சடலம் எங்க கிடக்குதுனு போலீஸ் கேட்டதும், சேலம் வாழப்பாடில உள்ள வெள்ளாள குண்டம் பகுதில உள்ள தன்னோட வீட்டுக்கு காவலர்களை அழைச்சிட்டு போயிருக்காரு முதியவர். அங்க, கழுத்துல கத்தியால குத்தப்பட்டு சடலமா கெடந்த இளம்பெண்ண மீட்டு போஸ்ட் மார்டத்துக்காக அனுப்பி வச்ச காவலர்கள் அடுத்து முதியவர்கிட்ட விசாரணை நடத்திருக்காங்க. அப்பதான், முதியவர் யாரு? கொலை செய்யப்பட்ட இளம்பெண் யாரு? முதியவர் எதுக்காக அந்த பொண்ணை கொலை செஞ்சாருனு எல்லாத்துக்குமே விடை கிடைச்சது.கசாப்பு கடையை நடத்தி வந்த முதியவர் செல்வம்வெள்ளாள குண்டம் பகுதிய சேர்ந்த செல்வம்-ங்குறவரு அதே பகுதியில, கசாப்பு கடை நடத்திட்டு இருந்துருக்காரு. இவரோட மனைவி மாதம்மாள் கடந்த சில வருஷங்களுக்கு முன்னாடி வேற ஒருத்தரோட போயிட்டாங்க. இந்த தம்பதிக்கு ஒரே மகள். பேரு பிரியாங்கா. மனைவி விட்டு போனதுல இருந்து, 21 வயசான மகள் பிரியங்காவ தந்தை செல்வம் தான் கவனிச்சிட்டு இருந்தாரு. எவ்வளவு நாள் மகள நம்ம கூடவே வச்சிக்க முடியும்னு நினைச்ச செல்வம், கடந்த ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கண்ணன்-ங்குறவருக்கு மகள கல்யாணம் பண்ணி வச்சிருக்காரு. டார்ச்சர் தாங்க முடியாமல் தந்தை வீட்டிற்கு சென்ற பிரியங்காகல்யாணம் முடிஞ்ச கொஞ்ச நாள் மனைவி பிரியங்காவ நல்லபடியா பாத்துக்கிட்ட கண்ணன், அதுக்குப்பிறகு, தினமும் மதுபோதையில வீட்டுக்கு வந்து பிரியங்காவ அடிச்சு சித்ரவதை பண்ணிருக்காரு. கார் டிரைவரான கண்ணன் மதுபோதைக்கு அடிமையானவர்னு தெரியாம பிரியங்கா அவருக்கு கழுத்த நீட்டிருக்காங்க. இப்ப இந்த தம்பதிக்கு ஒரு வயசுல குழந்தையும் இருக்கு. தெனமும் கணவன் கொடுக்குற டார்ச்சர தாங்க முடியாம பிரியங்கா, தன்னோட அப்பா வீட்டுக்கு போயிட்டாங்க. மகள் பிரியங்கா கணவனை பிரிந்து வந்ததால் ஆத்திரம்அப்படி மனைவி கோச்சிக்கிட்டு மாமனார் வீட்டுக்கு போகும்போதெல்லாம், கண்ணன் அவங்கள சமாதனப்படுத்தி வீட்டுக்கு கூப்பிட்டு போயிடுவாராம். ஆனா, கடந்த ரெண்டு வாரத்துக்கு முன்னாடி கணவன் கூட சண்ட போட்டுட்டு தந்தை செல்வம் வீட்டுக்கு வந்த பிரியங்கா, கணவன் வீட்டுக்கு போகாம தன் அப்பா கூடவே இருந்துருக்காங்க. மகள் அடிக்கடி கணவன்கிட்ட கோவிச்சிக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டு போறதுமா இருந்தது செல்வத்துக்கு சுத்தமா பிடிக்கல.மனைவியை போல் மகளுக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகம்அதுமட்டுமில்லாம, மனைவி மாதம்மாள் வேற ஒருத்தருக்கூட போன மாதிரியே, மகளும் யாருடையாவது தொடர்பு ஏற்பட்டதால தான் அடிக்கடி கணவன்கூட சண்ட போட்டுட்டு வீட்டுக்கு வராளோன்னு சந்தேகப்பட்டுருக்காரு செல்வம். அதனால, குடிச்சிட்டு வந்து பெத்த மகள தகாத வார்த்தைகளால பேசுனது மட்டுமில்லாம, அவங்கள அடிச்சு காயப்படுத்திருக்காரு. சம்பவத்தனைக்கு ஃபுல் போதையில வீட்டுக்கு வந்த செல்வம், வீட்டுல இருந்த மகள வாயிக்கு வந்தபடி பேசிருக்காரு.தந்தை - மகளுக்கு இடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறுஅவரு பேசுனத பொறுத்து கொள்ளாம பிரியங்காவும் பதிலுக்கு பதில் பேச அப்பாவுக்கும் மகளுக்கும் இடையில பயங்கர சண்ட வந்துருக்கு. ஒருகட்டத்துல, ஆத்திரத்தோட உச்சிக்கு போன செல்வம், கசாப் கடைக்கு யூஸ் பண்ற கத்திய எடுத்துட்டு வந்து மகளோட கழுத்து பகுதிலேயே வெறித்தனமா வெட்டிருக்காரு. அதுல, பிரியங்காவுக்கு அதிகபடியான ரத்தம் வெளியேறி அவங்க சம்பவ இடத்துலேயே துடிதுடிச்சு உயிரிழந்துட்டாங்க.செல்வத்தை கைது செய்து விசாரணைகொலை பண்ண கையோட ஸ்டேஷனுக்கு போய் நடந்த எல்லாத்தையும் ஒன்னுவிடாம போலீஸ்கிட்ட சொல்லி சரணடைச்சிருக்காரு செல்வம். அதுக்குப்பிறகு, கொலை நடந்த இடத்துக்கு வந்த போலீஸ், நடுவீட்டுல ரத்த வெள்ளத்துல கிடந்த பிரியங்கா உடல மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வச்சாங்க, அதேநேரம், பெத்த மகளையே வெட்டி கொலை பண்ண செல்வத்தையும் கைது பண்ணி ஜெயில்ல தள்ளிட்டாங்க. Related Link இரவில் ரவுடியை சாய்த்த கும்பல்