திண்டுக்கல் மாவட்டம் பாண்டியன் நகரில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றியதை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே பல ஆண்டுகளாக செங்கல், மணல், எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கடைகளையும், பழச்சாறு கடைகளையும் 50க்கும் மேற்பட்டோர் நடத்தி வந்தனர். இவர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி இடத்தை காலி செய்யுமாறு நெடுஞ்சாலைத்துறையினர் பலமுறை கடிதம் அனுப்பினர். அதனையும் மீறி இடத்தை காலி செய்யாததால் ஜேசிபி மற்றும் டிப்பர் லாரிகளுடன் வந்து அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பொருட்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகளை அமைத்து வியாபாரம் செய்தவர்களின் கடைகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வந்ததால் வியாபாரிகள் சாலை மறியல் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட திண்டுக்கல் திருச்சி சாலையில் பாண்டியன்நகர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே பல வருடங்களாக நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் செங்கல் மணல்,எம்சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் வைத்து சிலர் வியாபாரம் செய்கின்றனர். மேலும் கரும்புச்சாறு, பழச்சாறு, இளநீர், உள்ளிட்ட பல்வேறு வகையான பழக்கடைகளை 50-க்கும் மேற்பட்டவர்கள் வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் மூலம் ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி இடத்தை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் தொடர்ந்து தபால் அனுப்பி உள்ளனர், ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பை அகற்றாதால் இன்று 20க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுடன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஜேசிபி மற்றும் டிப்பர் லாரிகளுடன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாது என்றும் மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் எனக் கூறி திண்டுக்கல் திருச்சி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட சாலையோர வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் வியாபாரிகள் 10 நாட்கள் அவகாசம் கேட்டதால் பத்து நாட்கள் அவகாசம் தரப்படுவதாகும் அதற்குள் ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால் காவல்துறை உதவியுடன் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றுவோம் எனக்கூறி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் காவல் துறையினரும் அங்கிருந்து சென்றனர்.