சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற வேண்டுமென தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி, தூயமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதிலமடைந்த குடியிருப்புகளை இடித்து விட்டு புதிதாக கட்டிக் கொடுக்க திட்டமிட்டபோதும், குடியிருப்புவாசிகள் காலி செய்ய மறுப்பதாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகள் குறித்து இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே தகவல் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காதது அதிகாரிகளின் அலட்சியத்தையே காட்டுவதாக அதிருப்தி தெரிவித்தது.