பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சுமார் 75 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள பாசன ஏரி தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கோவில்பாளையம் கிராமத்தில் சுமார் 75 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள ஆறுமாறன் குளம் மற்றும் புது ஏரியை ஆக்கிரமித்துள்ள தனிநபர்கள், ஏரியை விளை நிலங்களாக மாற்றி பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை பயிர் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நீர்நிலை ஆக்கிரப்பை அகற்ற கூறி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் 75 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள ஏரி காணாமல் போயுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.