ரிசர்வ் வங்கியின் புதிய நகை கடன் கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி, நாகப்பட்டினம் மாவட்டம் அவுரி திடலில் காவிரி விவசாயிகள் சங்க கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கியின் உத்தரவை திரும்ப பெற்று, பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.