ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்து, இஸ்லாமியர்கள் அமைதி ஊர்வல பேரணி நடத்தினர். மேலும், வக்ஃப் திருத்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.