ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தில் சுமார் 200க்கு மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். 2024 ஆம் ஆண்டு முதல் ஓய்வூதியம் வழங்கவில்லை என்றும், காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை எனவும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் முழக்கமிட்டனர்.