ஆனைமலை அடுத்த கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் சுமார் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்ததால் மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தமிழக முழுவதும் இன்று மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ் டூ மாணவர்களுக்கு பொதுத்தேர்வு துவங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவை ஆனைமலை அடுத்துள்ள கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெறுகிறது.இதற்காக காலை முதலே நூற்றுக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்து ஆர்வத்துடன் படித்து வருகின்றனர். இதனிடையே பள்ளி வகுப்பறை செல்லும் படிக்கட்டின் அருகே சுமார் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு அருகில் இருந்து வெளியே வந்துள்ளது.அலறியடித்துக்கொண்டு ஓடிய மாணவர்கள் பாம்பை கண்ட மாணவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். உடனடியாக இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் சுரேஷ் நீண்ட நேரம் போராடி பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர், பிடிக்கப்பட்ட பாம்பை ஆழியார் அடர் வனப்பகுதிக்கு கொண்டு சென்று பத்திரமாக விடுவிக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Related Link இது அதிமுக போஸ்ட்ரா? இல்ல பாஜக போஸ்டரா?