ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், தியாகி இம்மானுவேல் சேகரனின் மணி மண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், அரசின் கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன், மணி மண்டபம் பணிகளை முடித்து அதன் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.