அரக்கோணத்தில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையின் நடுவே அமைந்துள்ள மின் கம்பங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மின்வாரிய துறையினர் அகற்றவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில் ரயில்வே நிர்வாகத்தின் காலதாமதத்தினால் மின் கம்பங்கள அகற்றும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக மின்வாரியத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். வளர்ச்சி பணியில் தவறான பணிஅரக்கோணம் ரயில் நிலையத்தில் தற்போது வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பணிகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், ரயில் நிலையத்திற்கு செல்ல மக்கள் பயன்படுத்தி வந்த பிரதான சாலை முற்றிலுமாக குண்டும் குழியுமாக காட்சியளித்து வந்தது. சாலை விரிவாக்கத்தின் போது நடுவில் வந்த மின்கம்பங்கள்இதன் காரணமாக வாகன போக்குவரத்து அடிக்கடி இடையூறு ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர். பொதுமக்களின் தொடர் கோரிக்கை ஏற்று ரயில்வே நிர்வாகம் அப்பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் வகையில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. மின்கம்பங்களை அகற்றாமல் விட்ட ரயில்வேமேலும் சாலை அகலப்படுத்தப்பட்டது. அப்போது சாலையோரத்தில் இருந்த மின் கம்பங்களை ரயில்வே நிர்வாகம் அகற்றாமல் அதனை அப்படியே விட்டுவிட்டு சாலை விரிவாக்க பணிகள் மேற்கொண்டது. இதன் காரணமாக மின் கம்பங்கள் அனைத்தும் சாலையின் நடுவே அமைக்கப்பட்டது போல் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறாக இருந்தது. இது குறித்து ரயில்வே நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் முறையிட்ட நிலையில் மின்வாரிய துறையினருக்கு மின் கம்பங்களை அகச்சி சாலையோரத்தில் அமைக்க உரிய கட்டணம் செலுத்தியதாகவும் ஆனால் மின்வாரியத் துறையினர் பணிகள் மேற்கொள்ளவில்லை என கூறப்பட்டது. அச்சத்துடன் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள்அதனைத் தொடர்ந்து மின்வாரியத் துறையினரை தொடர்பு கொண்ட போது வாகனப் போக்குவரத்திற்கு இடையூறாக அமைந்துள்ள மின் கம்பங்களை அகற்றி மாற்று இடத்தில் அமைக்க அங்கு ரயில்வே நிர்வாகம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு உள்ளதால் பணிகள் தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக மின்வாரியத் துறையினர் தகவல் தெரிவித்தனர். மின் கம்பங்களை அகற்ற கோரிக்கைவாகன போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்றாமல் ரயில்வே நிர்வாகமும் மின்வாரியத் துறையினரும் மாறி மாறி குறை சொல்வதை விட விபத்துக்கள் ஏற்படும் முன் விரைந்து கம்பங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சார்பில் தற்போது கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. Related Link தொட்ட நீ கெட்ட....