புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பாப்பான்பட்டியில் சிறிய மாடு, பெரிய மாடு என இரு பிரிவுகளாக எல்கை பந்தய போட்டி நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டியில் 13 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டு வண்டி பிரிவில் 18 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டன. புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் நிர்ணியிக்கப்பட்ட எல்லையை அடைய காளைகள் சீறிப்பாய்ந்து சென்றதை சாலையின் இருபுறமும் திரண்டிருந்தவர்கள் கைத்தட்டி ஆரவாரத்துடன் கண்டுரசித்தனர்.