கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - கோத்தகிரி மலைப்பாதையில் உலா வந்த காட்டு யானை, கார் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரமாக சாலையை வழிமறித்து முகாமிட்டிருந்த யானையால், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சத்துடன் காத்திருந்தனர். திடீரென கார் கண்ணாடியை யானை உடைத்ததால், அதிலிருந்தவர்கள் பீதியடைந்து கூச்சலிட்டனர். மற்றொரு வாகனத்தில் இருந்தவர்களும் கூச்சலிட்டதால் யானை விலகி சென்றது.