நீலகிரி மாவட்டம் சேரங்கோட்டில் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் புல்லட் ராஜா மற்றும் கட்டபொம்மன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிக்குளில், கடந்த 6 மாதங்களாக உலாவரும் புல்லட் ராஜா மற்றும் கட்டபொம்மன் காட்டு யானைகள், வியாழன் இரவு சேரன்கோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் சத்துணவு கூடத்தை உடைத்து அங்கிருந்த அரிசியை சாப்பிட்டு சென்றன. யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்ட நிலையில் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.