நீலகிரி மாவட்டம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. தற்போது பலாப்பழ சீசன் என்பதால் பழத்தை சாப்பிட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், அவ்வபோது வாகனங்களை சேதப்படுத்தும் சம்பவங்களும் நடப்பதால், வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து யானைகளை விரட்ட நடவடிக்கை வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.