கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த வாட்டர் பால்ஸ் எஸ்டேட் நிறுவன அலுவலகத்தை யானை கூட்டம் இடித்து சூறையாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது. நடுமலை பகுதியில் செயல்பட்டு வரும் இந்த அலுவலகத்தை நள்ளிரவு 2 மணியளவில் யானைக் கூட்டம் சூறையாடி சென்றது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் இரவில் வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.