கோவை மாவட்டம் தடாகம் அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த யானை, வீடு ஒன்றின் காம்பவுண்ட் கேட்டிற்குள் தும்பிக்கையை நுழைத்து உணவு பொருள் தேடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. முன்னதாக தாளியூர் பகுதியில் வலம் வந்த யானை, பழனிசாமி என்பவரது தோட்டத்தில் இருந்த வாழை மரங்களை தின்று சேதப்படுத்தியுள்ளது. இதனால் பீதியடைந்துள்ள அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.