கோவை தடாகம் பகுதியில் காட்டு யானை வேட்டையன், மீண்டும் உணவு தேடி வீதியில் வலம் வந்ததால் அப்பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். தடாகம், பன்னிமடை, துடியலூர், பெரியநாயக்கன் பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் சுற்றித் திரிந்து வந்த வேட்டையன், 2 பேரை தாக்கிக் கொன்றதால் அதனை பிடித்து வனப்பகுதியில் விடுமாறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கும்கி யானைகளை வரவழைத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவே, சில நாட்களாக ஊருக்குள் வராமல் இருந்தது. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தடாகம் - துடியலூர் சாலையில் வரப்பாளையம் பிரிவு பகுதியில், வேட்டையன் யானை உணவு தேடி ஆக்ரோஷமாக வலம் வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.