கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே ஆழ்துளை கிணறு பழுது பார்க்கும் பணியின்போது மின்சாரம் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். க.பரமத்தி அருகே கிரசர்மேடு என்கிற பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் முன்னூர் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த, ஆழ்துளை கிணறை பழுது பார்க்கும் பணியில் 3 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆழ்துளை கிணற்றில் இருந்து இரும்பு பைப்புகளை வெளியே எடுக்கும்போது, எதிர்பாராத விதமாக மேலே செல்லும் மின்சார கம்பியில் உரசியதில் பழுது நீக்கும் இயந்திரம் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. இதில், பணியில் ஈடுபட்டிருந்த நிமிந்தப்பட்டி சதீஷ், முன்னூர் பாலு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.