நெல்லை பாளையங்கோட்டையில் விளம்பர பலகையை அகற்றியபோது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். விளம்பர பலகைகளை அகற்றும் பணியில் கங்கைகொண்டானை சேர்ந்த பேச்சிமுத்து, சதீஷ்குமார் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். ரயில்வே கிராசிங் அருகே வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை அகற்றியபோது மின்சாரம் தாக்கியதில் பேச்சிமுத்து உயிரிழந்த நிலையில், சதீஷ்குமார் காயமடைந்தார்.