திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்த நிலையில், அதிகாரிகள் வராததை கண்டித்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மிட்டூர் மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணிபுரிந்து வந்த கரம்பூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன், நாராயணபுரம் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.