திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் கான்கிரிட் மின் கம்பங்களில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து, மின் கம்பம் கீழே விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், அதை கண்டுகொள்ளாமல் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மின் கம்பங்களை மாற்ற மாற்று மின் கம்பங்கள் வரவழைக்கப்பட்டு பல மாதங்களாக தரையில் போடப்பட்டுள்ளதாகவும் ஆனால் பலமுறை புகார் அளித்தும் மின் கம்பங்களை மின் வாரியம் சரி செய்யவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.