கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இரும்பு கம்பத்தின் கீழ் பகுதி முழுவதும் துருப்பிடித்து மரத்தின் துணையில் நிற்பதால் மின்வாரிய துறையினர் கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.